நம்மில் ராமாயணம்
ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்
1)ராமர்--பரமாத்மா,இவ்வுலகில் ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதனை வாழ்ந்துகாட்டிய மகான்.
2)சீதை--ஜீவாத்மா
3)ராவணனன்---மனம்
4)அனுமன்--------குரு.
சரி, இக்கதாபாத்திரங்கள் எவ்வாறு நம்மோடு பொருந்தும்?
ராவணனின் மனம் ஆசையால் அலைகழிக்கப்படுகிறது.ராவணனுக்கு, பலர் பிறன் மனையை விழைவது தவறு,சிறை பிடித்தது தவறு என்று எடுத்யுரைகின்றனர். கேட்டானா? இல்லையே! மனதுள்ளே இருந்த ஆசை, ஆங்காரமாய் எழுந்து நின்று , உற்றார் ஒவ்வொருவரையும் இழக்க வைக்கிறது.
ஜீவாத்மாகிய நம் மனமும்,கட்டுப்பாட்டை இழந்து ஆசை வலையில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலைகழிக்கப்பட்டு துன்புறுகிறது. ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தகுதியுள்ள ஒருவன் இலட்ச ரூபாய்க்கு ஆசைபடுகிறான்.அதற்காக போகாத வழிக்கெல்லாம் போய் அல்லலுற்று இருப்பதையும் இழந்து தவிக்கிறான்."நான் அதிர்ஷ்டமில்லா பாபி,எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம்" என்று அரற்றுகிறான். நாம் எல்லோரும் இறைவனின் வீட்டில் வாடகைக்குஇருப்பவர்கள் தான்.வந்தவேலை முடிந்தவுடன்,புறப்படும்போது,காதருந்த ஊசியைக்கூடநம்முடன் கொண்டு செல்ல முடியாது,என்பதை எல்லோரும் அறிவோம் மனதலிலுள்ள ஆசை இதைஒதுக்கிவிட்டு மேலும் , மேலும் துன்பத்தை தேடிக்கொள்கிறது.
ஆசையில் அகப்பட்ட மனம் , சீதையாகிய ஜீவனை தன்னுள்ளேயுள்ள பரம்பொருளையடையவிடாது இராவணனாக நின்று தடுக்கிறது.
ஜீவாத்மாவாகிய சீதை பரமனாகிய ராமனை பிரிந்து துடிக்கிறாள்,துவளுகிறாள்.ஆனால் ராமன் வந்து தன்னை மீட்பான் என்று உறுதியாக நம்புகிறாள்.இது தான் நேர்மறை எண்ணம் என்பது.
இந்த உறுதி ஜீவாத்மாகிய நமக்கு இருந்தால் கண்டிப்பாக சீதைக்கு வந்த அனுமனைப்போல நமக்கும் ஒரு குரு கிடைப்பார்.நாம் பரமனையடைய நிச்சயம் வழிகாட்டுவார். "குரு வழிகாட்டுதல் மட்டுமல்லாது நான் இருக்கிறேன் உனக்கு"என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறார்
குரு இரண்டு வகையில் நமக்கு கிடைக்கலாம்.
1) குருவே நம்மை தேடி வந்து நம்பிக்கை கொடுப்பது.சீதையை தேடி அனுமன் வந்து ராமன் வந்து சீதையை விடுவிப்பான் என்ற நம்பிக்கையை கொடுத்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கையிலும் குருவே வந்துதான் பல தாந்தீரீக தந்திரங்களை கற்றுக்கொடுக்கின்றனர்.
2)நாமே குருவை தேடி அலைந்து கண்டுபிடிப்பது. சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் இது நடந்தது.பல குருமார்களிடம் தன் கேள்விக்கான விடையை தேடுகிறார். இறுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் தான் தன்னுடைய கேள்விக்கான பதிலை பெறுகிறார்.
அனுமன் என்ற குரு கிடைத்திருக்காவிட்டால் ராவணனன் என்ற அரக்கனினிடமிருந்து விடுதலை கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
ஆகவே நம்முடைய மனமே ராவணனன்.
நாம் எல்லோரும் சீதை என்ற ஜீவாத்மாக்கள்.
நம்முள் உறையும் மனசாட்சியே நம் பரமன்.
மனசாட்சிக்கு தெரியும் நாம் செய்வது சரியா,அல்லது தப்பா என்று. தவறு என்று தெரிந்தே செய்யும் போது மனசாட்சி உறுத்துகிறது என்று சொல்கிறோமே, அதுதான் தெய்வத்தின் குரல். எவனொருவன் இந்த குரலை அலட்சியபடுத்துகிறானோ அவன் மாளாத துன்பத்திற்கு ஆளாகிறான்.
நாமும் நம்முள்ளேயுறையும் பரமனையடைய குருவின் உதவியை நாடுவோம்.அவர் காட்டும் வழியினை பின்பற்றி மனமான அரக்கனை வென்று பரமேஷ்வரனின் தாள் சேர்வோம்.

Arputham
ReplyDelete