வாழ்வாங்கு வாழ்தல்

 


"மானுடராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" வாழ்க்கை என்பது மனிதனாய் பிறந்தஒவ்வொருக்கும்வாய்க்கப் பெற்ற மிகப் பெரிய பேறு.அதை எவ்வாறு வாழ்கிறோம் என்பது தான் மிகப்பெரிய கேள்வி.நாம் வாழும் வகையில் தான் நமக்கு இன்பமும் துன்பமும் வாய்க்கப்படுகிறது. நாம் எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதல்ல விஷயம்,நாம்வாழ்ந்தகாலத்தில்மனிதனாகவாழ்ந்தோமாஎன்பதில் தான் அடங்கியுள்ளது நாம் பிறவி  எடுத்ததின் பயன்.

மனிதம் என்பது என்ன? தன் பயன் கருதாது பிறர் நலம் பேணுவதே!இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த நெல்சன் மண்டேலா,அன்னை தெரசா,நம்மஊர்காந்தியடிகள்,விவேகாநந்தர்அம்பேத்கார்,காமராஜர்,ஆப்ரஹாம் லிங்கன்,போன்றோரை சொல்லிக்கொண்டே போகலாம்.இவர்கள் எல்லாம் மனித நேயத்தோடு வாழ்ந்ததால் தான் இன்றும் நம் மனங்களில் வாழ்வாங்கு வாழ்கின்றார்கள

"தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற முதுமொழிக்கேற்ப நமக்கு ஏற்படும் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் நாமே தான் காரணம் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இது எப்படி?

நம் ஒவ்வொருக்குள்ளும் மனசாட்சி என்ற உள்ளுணர்வு உள்ளதல்லவா?அது உள்ளதை மட்டுமே உரைக்கும்.பின் எப்படி தவறு நடக்கிறது? நாம் செய்யும் தவறை மனம் நியாயப்படுத்தமுற்படும்போது.ஆனால்மனசாட்சி உண்மையைத்தான்உரைக்கும்.ஆகவே மனம் அதிக ஆசையை வளர்த்து சிக்கலில் மாட்டி விடலாம்,ஆனால் மனசாட்சிக்கு தெரியும் எது நல்லது, எது கெட்டது என்று.ஆகவே மனம் போனபடி நடக்காது மனசாட்சி சொல்கின்றபடி முடிவுகளை எடுக்க வேண்டும். 

 இந்த மனசாட்சியை தான் ஆன்மீக வாதிகள் இறைவன் என்று கூறுகிறார்களோ! இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புவர்.திருடன் கொள்ளையடிப்பதும் மகிழ்ச்சிக்காக.திருடிய பொருளை வைத்துக்கொண்டு இன்பமாக வாழலாம் என்றுதானே! ஆனால் இது எத்தனைநாட்களுக்கு? கையில் உள்ளது கரைந்து விட்டால் அல்லது போலீஸில் பிடிபட்டுவிட்டால்?கிடைத்த மகிழ்ச்சி காணாமல் போய்விடும்.இறுதியில் துன்பமே! ஆகவேமகிழ்ச்சிஎன்பதுநிலையற்றது.ஆனால் ஆனந்தம் என்பது நிலைத்திருப்பது.

மனம் அடுத்தவர் வாழ்க்கையை பார்த்து பொறாமை படும்.அவர்களது போலத்தானும் ஆக வேண்டும் என்பதற்காக முறையற்ற செயல்களில் ஈடுபட தூண்டும்.ஆனால் மனசாட்சியே அதை செய்யவொட்டாது தடுக்கும்.

நாம் எல்லோரும் அவரவர் வாழும் சமூக கட்டுப்பாட்டைமதித்துநடந்தால் மற்றவர்களால்மதிக்கப்படுவோம்.அப்படியில்லாது மனம் போனபடி நடந்துக்கொண்டால் சமூகம் அவர்களை ஒதுக்கிவைத்துவிடும். ஆகவே வாழும்வகையறிந்து மரியாதையுடன் வாழ வேண்டும்.இது எப்படி சாத்தியம்?

1)வாழ்க்கைக்குதேவையானதுகிடைத்தவுடன் திருப்திபடுதல்.

தேவைக்கு அதிகமானது பெற முயற்சித்தால் மன அமைதி தொலைந்துவிடும். நமக்கு வேண்டப்பட்டவர் , நம்மை விட செல்வத்திலோ,பதவியிலோ மேலான நிலையில் இருக்கலாம்,அதைப்பார்த்து மனம் பொறாமை என்றவகையில் வெந்து நிம்மதியை இழந்துவிடக்கூடாது.இப்பொழுது வாழும் வாழ்க்கையிலேயே பூரண நிம்மதி கிடைத்தால்,கிடைக்காத ஒன்றை நினைத்து நம் சந்தோஷம் இழப்பது புத்திசாலித்தனமா? என்று யோசியுங்கள்!

2)பிறர் புகழ வேண்டும் என்பதற்காகயின்றி நம் மனசாட்சி சரி என்னும் நற்காரியங்களை செய்தல்.

உடல்வலிமைபெற்றோர்உடல்நலிந்தோருக்கு ஆவன செய்யலாம்.பொருள் படைத்தோர் பொருள்இல்லாதுவாடும்(தகுதியுள்ளோருக்கு) உதவலாம்.

தவறு செய்வோரை சுடுசொற்களால் சாடாது அன்பு வழியில்  திருத்த முயர்சித்தல் நல்லது.

3)கல்வி கற்கும் வயதில் மனதை சிதறவிடாது , கல்வியை கற்க வேண்டும். கல்வி , செல்வம் சேர்ப்பதற்காக மட்டுமல்லாது,பிறர்க்கும் அது சென்றடைய நாம் ஒர் கருவியாக இயங்க வேண்டும்.நமக்கு கிடைத்த அறிவு செல்வத்தை,வேண்டுபவர்களுக்கு வாரி வழங்க வேண்டும். அதுவே நாம் வாழ்வாங்கு வாழ்தலின் பொருள்.

4)அன்பு தான் மனித நேயத்தின் அடித்தளம். வள்ளுவம் பேசுகிறது,அன்புடையவர்கள் எல்லாம் உடையவர்கள்,அன்பில்லாதவருக்கு எலும்பை போர்த்திய தோலை உடையவர்கள் ஆவர் என்று . பொருள் மிகுந்தவர் கஷ்டகாலத்தில் எளியோருக்கு உதவா செல்வத்தால் என்ன பயன்?உறவுகளுடன் இணக்கமாக விட்டு கொடுத்து வாழ்ந்தால் தான் மனம் அமைதியாக இருக்கும்.

5)கோபமும் ஒவ்வாத உணவுமே நம் நோய்க்கு காரணம்.நோய் உள்ள வீட்டில் மகிழ்ச்சி இருக்காது.மகிழ்ச்சி இல்லா வீட்டில் தெய்வம் எப்படி தங்கும்?

ஆதலால் மனித நேயத்தோடு ,"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து"என்ற பழமொழியை கருத்தில் கொண்டு வாழ்ந்தால் இக்குறுகிய மனித வாழ்வினை எளிதில் வெற்றிகரமாக வாழ்ந்து விடலாம். நம் வாழ்வின் வெற்றி படித்த பட்டங்களை கொண்டோ ,சேர்த்த செல்வங்களை கொண்டோ அளவிடவதில்லை, மாற்றாக நாம் வாழ்ந்த நாட்களில் மனித நேயத்தோடு வாழ்ந்தோமா என்பதில் தான் உள்ளது.

        





  

Comments

Popular posts from this blog

பீஷ்மம்

அலகிலா விளையாட்டுடையான்

தவம் என்பது யாதெனில்........