காலம்
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது"__என்றார் அறிஞர் அண்ணா. பொன் போனால் திரும்பவும் தேடிக்கொள்ளலாம் ஆனால் கண் போனால் வராது. அதைப்போலத்தான் காலமும்.
கடந்து விட்டால் திரும்பவும் கிடைக்காது. நேற்று படிக்க வேண்டிய பாடத்தை நேற்றே படித்திருக்க வேண்டும். அதை நாளைக்கு என்று தள்ளி போட்டால் வெற்றி எப்படி கிடைக்கும்? இன்றைய பாடமும், நாளைய பாடமும் சேர்ந்து சுமை அதிகரித்து விடாதா? நேற்று நடந்த பரீக்ஷைக்கு இன்று போனால் பரீக்ஷை தான் எழுத முடியுமா?. இதைத்தான் நம் பெரியவர்கள்
"பருவத்தே பயிர் செய்.", "ஆடிபட்டம் தேடி விதை",என்றும்,
"ஐந்தில் வளையாது, ஐம்பதில் வளையுமா?" என்றும் காலத்தின் முக்கியத்தை சொன்னார்கள். காலத்தை மிஞ்சிய மருந்து எதுவுமில்லை. எப்பேர்பட்ட காயத்தையும் காலம் என்ற மருந்து ஆற்றிவிடும். காயத்தினா ல் ஏற்பட்ட வடு வேண்டுமானால் சில சமயத்தில் மறையாது போகலாம் , ஆனால் வலி காலம் செல்ல,செல்ல மறைந்து போகும்.
வலியதுகாலம்
காலத்தை கையாள தெரிந்தால் காலனையும் வெல்லலாம். இதைத்தான் திருவள்ளுவரும்,
" கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்தவிடத்து."
காலம் கனியும் வரை கொக்கு ஒற்றைகாலில் தவம் இருப்பதைப் போன்றே இருந்து காலம் கனியும் போது அது மீனை கொத்துவதைப்போல தகுந்த காலம் வரும் போது காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும்.இதைத்தான் ,
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்றார்களோ!
"பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீரும் ஆர்க்கும் கயிறு. "
காலத்துக்கு தகுந்தபடி நடந்தால் அது செல்வத்தையும் தங்கியிருக்கும் படி கட்டும் கி
இருக்கும். என்று காலத்தின் உயர்வினை சிறப்பித்து கூறுகிறார்.
காலத்தை கையாளும் விதம்
ஆம்,நாம்வாழும் காலத்திற்கு தகுந்தவாறு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு வியாபாரத்தையே எடுத்துக்கொள்வோம். எந்தெந்தெந்த காலத்தில் என்னென்ன பொருள்களுக்கு தேவை அதிகம் உள்ளதோ அந்தந்த பொருட்களை விற்றால் தானே தேடிய செல்வத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.
ஒருவனுக்கு உதவி செய்யும்போது அவனுக்கு தேவையுள்ளது என்று அறிந்து உதவி செய்ய வேண்டும்.அது தான் இந்த ஞானத்தினும் மாணப் பெரிதாக கருதப்படும்.பொருளாதார வசதியில்லாத ஒரு மாணாக்கன் உள்ளான் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாகயுள்ளுமாயின் அவனுக்கு செய்யும் உதவி ஒரு குடும்பத்தையே உயர்த்திவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.
காலத்தினால் கிடைக்கும் வெற்றி
படிக்கும்காலத்தில் படித்து,உழைக்கும் காலத்தில் உழைத்து,குடும்பத்தை நடத்தும் விதத்தில் நடத்தி,பொறுப்புக்களை செவ்வனே நடத்தி முடித்தால்,இறைசிந்தனையோடு,எல்லாம் நடத்துபவன் அவனே! என்ற உணர்வுடன் செயல் பட்டால் காலமாற்றங்களால் வரவிருக்கும் துன்பங்கள் யாவும் சூரியனை கண்ட பனி போல் விலகி ஓடி விடும்.
Comments
Post a Comment