ஆனந்தம்
மனம் என்பது எண்ணற்ற எண்ணங்களின் வடிவமே.இதை நாம் , ஊனக்கண்களால் பார்க்க இயலாது.நம்முள் எழும் எண்ணங்களால் உணரலாம்.எண்ணங்கள் செயல்படும்போது சற்றே விலகி நிற்கிறது.செயலின் பயன் கிடைக்கும் போது ,மறுபடியும் அது உள்ளே நுழைந்து விடுகிறது.இதை இறைவன் கொடுத்த அறிவினால் அடக்கிவிடலாம்.மனம் இருக்கும்போது இந்த நிலையில்லாத உலகின் மீது பற்று வருகிறது.அதுவே அழிந்து விட்டால் நமக்குள் இருக்கும் ஆன்மாவை அறியலாம்.
ஆத்மா ஆனந்த மயமானது.இதை எப்படி புரிந்து கொள்வது? அதற்கு முதலில் "சச்சிதானந்தம்" என்பதின் பொருளை அறிய முயற்சி எடுக்க வேண்டும்.
சத் + சித்+ஆனந்தம்: சச்சிதானந்தம்.
"சத்" என்பது பிறப்பில்லாதது , என்றும் இருப்பது.மனம் அழியும் போது "சத்" ஐ உணரலாம். மூளையை இயக்குவிப்பது எது? மனம்.மனம் தான் எண்ணங்ளை உருவாக்குகின்றது.அந்த எண்ணங்கள் நிறைவேற செயல்கள்தேவைப்பபடுகிறது. .செயல்கள் செய்வதற்கு, உறுப்புகள் இயங்குவதற்கு மூளையின் ஆணை தேவை.இப்படி மனதை நாம் பார்க்காவிடினும்,அதன் செயல்களை விழித்திருக்கும் போது நம் புறக்கண்ணால் பார்க்கிறோம்.அதுவே நாம் உறங்கும் போது கனவில் பல காட்சிகளை அகக்கண்ணால் பார்க்கிறோம்.இங்கே மனம் மறைந்து விடுகிறது. மறைந்து விடும் ஒன்றை நிலையானது என்று எப்படி கூற முடியும்?ஆகவே மனம் சத் இல்லை.
உன் இதயம் இயங்குதற்கானகாற்றை எது உன்னுள்ளே ஒரே இடைவெளியுடன் செலுத்துகின்ற சக்தியே "சத்" ஆகும். அதுவே மலர்களை மலரவைக்கிறது,உயிரினங்களை வளர்க்கிறது.இந்த "சத்"நாம் "ஆன்மா"என்றழைக்கிறோம். இதை "சித்" என்ற தன்னுணர்வால் அறியலாம்.நாம் அனுபவிக்கும் இந்த உலகத்தில் உள்ள யாவும் நிலையில்லாதது.அவை யாவும் தோன்றிமறையும் தன்மையது.ஆகவே இவற்றின் மீது ஆசைவைக்கக்கூடாது என்ற அறிவு தான் "சித்".
சித்தம் தெளிவுற்றால் ஆத்ம தரிசனம் கிட்டும்.பிறகு என்ன? ஆனந்தம்,ஆனந்தம் ஆனந்தமே!!!!
அக்கா உங்களை இயக்கும் அந்த சிவன் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் ஆனந்தம் ஆனந்தமே. அந்த ஆனந்தத்தில் சில துளிகள் எனக்கு பருகக் கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி அக்கா
ReplyDelete