ஓ!தமிழா!
ஐல்லி கட்டு போராட்டம் இந்தியஇளைஞர்களை இவ்வுலகிற்கு தாம் யார்என்று காட்டியுள்ளது.மகிழ்சி.ஆனால்ஜல்லிகட்டு வெற்றியுடன் நம் பிரச்சனைகள் தீர்ந்து விடாது.இன்னும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு எதிராக நாம் கை கோர்த்தால் தான் நம் பண்பாட்டினையும்,கலாசாரத்தினையும், பாரம்பரித்தையும் காக்க முடியும்.நம் வளர்ச்சிக்கு அந்நிய நாட்டின் நட்பும் நமக்கு தேவை என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.இப்படி இருக்க,நமக்குள்ளும் மாற்றங்கள் வரவேண்டும்.அவை எங்கெங்கு வரவேண்டும் என் கருத்தினை பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.
1)கல்வி: நாம் எல்லோரும் ஆங்கில வழி கல்விற்கு மாறிவிட்டோம்.ஏன்? ஆங்கில மோகம் மட்டும் தான் காரணமா?அதுவும் ஒரு காரணம்.ஆனால் அது மட்டுமே காரணமாகாது.வேறு காரணங்களும் உண்டு.
#)உயர் கல்வி பெரும்பாலும் தொழில் சார்ந்த கல்வியை ஆங்கிலத்திலேயே கற்க வேண்டிய நிர்பந்தம்.ஆரம்ப கல்வியை தமிழில் படித்து விட்டு கல்லூரியில் ஆங்கிலத்தில் கற்பது சற்று சிரமம்.இதற்கு தீர்வு உயர் கல்விக்கான எல்லா புத்தகங்களையும் தமிழில் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.கற்பிப்பதும் தமிழில் இருக்க வேண்டும்.அப்படி என்றால் ஆங்கிலமே வேண்டாமா?யார் சொன்னது?மற்ற நாட்டுடன் உறவு கொள்ள ,வர்த்தகம் செய்ய,கருத்து பரிமாற்றம் செய்ய ஆங்கிலம் அவசியம்.இதற்கு ஆங்கிலத்தை இணைப்பு மொழியாககட்டாயமாக கற்க வழி வகுக்க வேண்டும்.தனிமை படுத்தபட்ட எந்த நாடும் முன்னேறியதாக சரித்திரமே இல்லை.நாம் எதிர்ப்பது அவர்களது மொ
ழியையோ,உறவையோ அல்ல , அவர்களின் கலாசார ஆக்ரமிப்பையே.ஆங்கில பள்ளியில் படிக்கும் குழைந்தைகள் சீருடைகள் மேல் நாட்டு பாணியில் இருந்தால் அது எவ்வாறு நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சௌகரியமாக இருக்கும்? ஏன் இந்திய கலாசார படி சீருடை அணிந்துக் கொண்டு அந்த கல்வியை கற்க முடியாதா?நிச்சயமாக நாம் மாற வேண்டும்.
#நம் நாட்டிற்கு வரும் அயல் நாட்டு விருந்தினர்களை வணக்கம் கூறி நம் நாட்டு பண்பாட்டின் பெருமையை பறை சாற்றும் வகையில் வரவேற்க வேண்டும்.
#உலகத்தின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் நம் குழந்தகளுக்கு தாய் மொழியை பேசவும்,எழுதவும் கற்றுகொடுக்க வேண்டும்.
#நம் பண்டிகைகளை மறக்காமல்,கொண்டாட வேண்டும்.
#சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போதெல்லாம் உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ வேண்டும்.
உணவு:- பீட்சா வந்தவுடன் பணியாரத்தை மறந்து விட்டோம்.Kfc வந்தவுடன் நல்லெண்ணெய்யில் வைத்த நாட்டு கோழி குழம்பை மறந்து விட்டு ஆஸ்பத்திரிக்கு நடையாய் நடக்கிறோம்.
தமிழா! விழித்தெழு!அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நம் பண்பாட்டினையும்,கலாசாரத்தையும் காக்க வீரு கொண்டு எழு!இளைய சமுதாயமே! நீ நினைத்தால் முடியும்!
Comments
Post a Comment